
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (11) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேலதிக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கடந்த 9ஆம் திகதியும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவும் விசாரணை ஒன்றுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்தார்.