அரசு ஊழியர்களுக்கு பேரிடர் கடன் வழங்குவது தொடர்பான புதிய சுற்றறிக்கை!

அரச ஊழியர்களுக்கு பேரிடர் கடன் வழங்குவது தொடர்பாக புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் மே 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் அரச ஊழியர்களின் குறைந்தபட்ச ஆரம்ப சம்பளம் உயர்த்தப்பட்டதை கருத்தில் கொண்டு, அரச ஊழியர்களுக்கு பேரிடர் கடன் வழங்குவதற்கான உச்ச வரம்பு எல்லையை தற்போதுள்ள 250,000 ரூபாவில் இருந்து 400,000 ரூபாவாக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply