
கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த பேருந்தை பாதுகாப்பற்றவகையில் செலுத்தியமையால் அதன் சாரதி களுத்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயணிகள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து களுத்துறை பகுதியில் வைத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சாரதியை, சட்டவைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்திய போது அவர் கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்தியுள்ளமை தெரியவந்தது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த சாரதியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.