
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் அனுமதிக்கப்பட்ட 12 பேரில், இராணுவம் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 6 வீரர்கள் உயிரிழந்துடன், ஏனைய 6 வீரர்கள் அரலகங்வில மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் சிகிச்சை பெற்றுவரும் இராணுவ வீரர்களின் நலன் விசாரிப்பதற்காக, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு வருகை தந்தார்.
இதன்போது, காயமடைந்த இராணுவ வீரர்களுக்கு தேவையான மேலதிக சிகிச்சைகள் குறித்து வைத்தியசாலை அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடிஇருந்தமை குறிப்பிடத்தக்கது.