
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் கொழும்பில் அரச தரப்பில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் முகமாக காலி முத்திடல் உட்பட பல பகுதிகளில் அரச தரப்பில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் சிங்களம் மற்றும் ஆங்கில் மொழிகள் மாத்திரமே இடம்பெற்றுள்ளது. இதனால் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் மீது கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.