அரசின் நல்ல எண்ணத்தின் அடிப்படையில் கைதாகிய இந்திய மீனவர்கள் விடுதலை!

இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை மீறி மீன் பிடித்த குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 இந்திய மீனவர்கள் இலங்கை அரசாங்கத்தின் நல்லெண்ண அடிப்படையில் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நீரியல் வளத்துறை திணைக்களத்தால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அரசாங்கத்தினால் நல்லெண்ண அடிப்படையில் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்ட அனைவரும் யாழில் இருந்து மிரிகானைக்கு அனுப்பப்பட்டு அதன்பின்னர் இந்தியாவுக்கு அனுப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply