இந்திய – இலங்கை ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

ஜனாதிபதி செயலகத்தில், இந்தியா-இலங்கை கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பு மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கான உத்தியோகபூர்வ அரசு விழா தற்போது இடம்பெற்று வருகின்றது.

இதன்போது வலுசக்தி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி, பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உட்பட பல ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோரின் தலைமையில் இணையவழி ஊடக,

சம்பூர் சூரிய சக்தி மின் உற்பத்தி தொகுதி நிர்மாணப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கையிலுள்ள 5000 மதத்தலங்களுக்கான கூரைமேல் சூரிய மின் உற்பத்தி தொகுதிகள் விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வெப்பநிலைக் கட்டுப்பாட்டுடனான விவசாயக் களஞ்சியம் தம்புள்ளையில் திறந்து வைக்கப்பட்டது.

அத்துடன் இலங்கையில் இந்தியக் கடனை மறுசீரமைப்பது தொடர்பான ஒப்பந்தங்களும் பரிமாறப்பட்டன.

மேலும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பிரதமர் மோடிக்கு ‘மித்ர விபூஷன’ கௌரவ பட்டம் வழங்கி வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply