
இலங்கை – இந்தியாவிற்கு இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவுகள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கை – இந்தியா ஆகிய இரு நாடுகளும் பல தசாப்தங்களாக பாதுகாப்பு நல்லுறவுகளைப் பேணி வருவதுடன், பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் கூட்டு இராணுவ மற்றும் கடற்படை பயிற்சிகள் ஆகியவற்றால் இருதரப்பு உறவுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்..
குறிப்பாக, இந்தியா ஆண்டுதோறும் இலங்கை முப்படைகளின் சுமார் 750 அதிகாரிகளுக்கு விடயதானம் சார்ந்த பயிற்சியை வழங்குவதாக பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.