ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட 2024 மத்திய வங்கியின் அறிக்கை!

இலங்கை மத்திய வங்கி இன்று அதன் முதன்மை வெளியீடான 2024 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வை ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சர் அனுர குமார திசாநாயக்கவிடம் வழங்கியது.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்கவினால் இந்த அறிக்கையை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஆழமான பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டில் இலங்கைப் பொருளாதாரம் மீட்சிக்கான குறிப்பிடத்தக்க அறிகுறிகளைக் காட்டியதாக மதிப்பாய்வு தெரிவிக்கிறது.

மீட்சிப் பாதை சவாலானதாக இருந்தாலும், பல கடன் நெருக்கடியில் உள்ள நாடுகளை விட குறிப்பிடத்தக்க வகையில் வேகமாக உள்ளது.

பொருளாதார நடவடிக்கைகளில் முன்னேற்றம், வாங்கும் திறனில் ஓரளவு மீள் எழுச்சி மற்றும் நிச்சயமற்ற தன்மை குறைதல் ஆகியவை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய நேர்மறையான குறிகாட்டிகளில் அடங்கும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply