
யாழ். வடமராட்சி பிரதேச செயலகம் முன்பாக சித்திரை புத்தாண்டு விற்பனைச் சந்தை இன்று (07) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி – கிழக்கு பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவும், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து இதனை ஆரம்பித்து வைத்துள்ளது.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பொ.சுரேஸ்குமார் தலைமையில் காலை 09.00 மணிக்கு நிகழ்வு ஆரம்பமாகியதுடன் மாலை 04.00 மணி வரை இடம்பெறவுள்ளது.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சித்திரை புத்தாண்டு விற்பனை சந்தையை நாடாவெட்டி திறந்துவைத்தார்.
விற்பனை சந்தையில் வடமராட்சி கிழக்கு பிரதேச உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகள் காட்ச்சிப்படுத்தப்பட்டிருந்தன.