நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் ஏற்பட்டுள்ள வெற்றிடம்!

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீர நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக தனது 38ஆவது வயதில் காலமானார்.

இவரது திடீர் மரணத்தால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக நாடாளுமன்றத்தால், தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அரசியலமைப்பின் 66(அ) பிரிவின் விதிகளின்படி, 2025 ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி முதல் பத்தாவது நாடாளுமன்றத்தில் ஒரு இடத்திற்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தின் பதில் பொது செயலாளர் சமிந்த குலரத்ன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்துள்ளார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply