ரயில் – முச்சக்கர வண்டி மோதி விபத்து- இருவர் படுகாயம்!

அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில், கொஸ்கம, அளுத்தம்பலம ரயில் கடவையில் முச்சக்கர வண்டியுடன் மோதியத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் இன்று (12) காலை இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது முச்சக்கர வண்டியில் சாரதியும், பெண் ஒருவரும் இருந்துள்ளனர்.

ரயிலுடன் மோதியதில் முச்சக்கர வண்டியின் இயந்திரம் கழன்று பல மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தின் போது முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரும் படுகாயமடைந்து அவிசாவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த நேரத்தில் ரயில் கடவை கேட் மூடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply