பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவன் மீது தாக்குதல்- கைதான மாணவர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர், பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அதே ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர்கள் குழுவால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வெலிகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்றது.

கடந்த 29 ஆம் திகதி ஹோமாகம பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்த ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர், அங்கு தங்கியிருந்த அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மற்றுமொரு மாணவனை தலைக்கவசத்தால் தலை மற்றும் முதுகு பகுதியில் மனிதாபிமானமற்ற வகையில் பலமாக தங்கியிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், ஹோமாகம தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை நடாத்தி குறித்த சந்தேக நபர்களைக் கைதுசெய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கிரிந்திவெல, தெல்கொட, யுதகனாவ, தலபிட்டியாகம, நலங்குட்டி மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 07 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் இன்று (7) ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, பிணையில் விடுவிக்க நீதவான் ராஜிந்திர ஜெயசூரிய உத்தரவை பிறப்பித்தார்.

குறித்த ஒவ்வொருவரும் தலா 3 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு நீதவான் அனுமதி வழங்கினார்.

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply