பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிரான ரிட் மனு தள்ளுபடி!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து கொள்ளாமல் இன்று (07) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லபார் தாஹிர் மற்றும் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கு தகுதி அற்றவர் என தீர்மானித்து, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, குறித்த மனுவை இலங்கை பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply