
‘ஸ்ரீ தலதா வழிபாடு’ விழாவை வருடாந்தம் நடாத்துவது தொடர்பிலான முன்மொழிவை மகாநாயக்க தேரர்கள் மற்றும் தியவடன நிலமேயிடம் முன்வைக்க உள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் தெரிவித்துள்ளார்.
இன்று (24) காலை நடைபெற்ற அரசாங்க அதிபர்களுடனான விசேட கலந்துரையாடலை தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேற்படி கலந்துரையாடல் சுகாதார பிரிவினரின் வேண்டுகோளுக்கு அமைவாக, கண்டியின் தற்போதைய நிலைமை குறித்து முடிவெடுப்பதற்காக இடம்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.