
பாதெணியவிலிருந்து அநுராதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்று, வீதியைக் கடந்து சென்ற சிறுமி மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதெணிய – அநுராதபுரம் வீதியில், நெலும்பத்வெவ சந்தி அருகே நேற்று (05) மாலை ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த சிறுமி, அம்பன்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அம்பன்பொல பகுதியைச் சேர்ந்த 8 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் சடலம் அம்பன்பொல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அம்பன்பொல பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.