
பாணந்துறையில் உள்ள ஹிரணை பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இன்று (29) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மேற்கு மாலமுல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற விருந்துபசாரத்தின் போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்த நிலையில் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேற்கு மாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹிரணை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.