நீதிபதிக்கு எதிராக அவதூறு பரப்பிய 06 சமூக வலைத்தள கணக்குகள் குறித்து சி.ஐ.டி விசாரணை!

சமூக வலைத்தளத்தில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக அவதூறு பரப்பிய ஆறு சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன், தனக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் பொய்யான தகவல்களைப் பரப்பிய ஆறு சமூக ஊடக கணக்குகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடொன்றை அளித்துள்ளார்.

குறித்த சமூக வலைத்தள கணக்கில், ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் பிள்ளையானுக்கு பிணை வழங்கியமை உள்ளிட்ட பல்வேறு போலியான தகவல்கள் மற்றும் தனது தனிப்பட்ட தகவல்களை உள்ளடக்கி அவதூறு விளைவிக்கப்படுவதாக நீதிபதி சசி மகேந்திரன் அளிக்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த ஆறு சமூக ஊடக கணக்குகள் தொடர்பாக தகவல்களைப் பெறுவதற்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இணைய கண்காணிப்பு மற்றும் புலனாய்வு பிரிவுக்கு கொழும்பு பிரதான நீதவான் தனூஜா லக்மாலி அனுமதி வழங்கியுள்ளார்.

அதன்படி சமூக வலைத்தளத்தில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரனுக்கு எதிராக அவதூறு பரப்பிய ஆறு சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply