
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வியட்நாமுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி ஜனாதிபதி எதிர்வரும் மே மாதம் 03ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரையில் 03 நாள் பயணத்தை வியட்நாமுக்கு மேற்கொள்ளவுள்ளார்.