
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சூரநகர் பகுதியில் மின்சார வேலியில் சிக்குண்டு இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றுள்ளது.
யானை நடமாட்டத்தில் இருந்து வயலை பாதுகாப்பதற்காக, வயலுக்கு போடப்பட்ட பாதுகாப்பு மின்சார வேலியை சரி செய்து கொண்டிருந்த வேளையில் இளைஞனுக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.
மிசாரம் தாக்கிய இளைஞனை காப்பாற்ற முற்பட்ட வேளையில் மற்றைய நபரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இருவரும் மாமன், மருமகன் முறையுடையவர்கள் என கூறப்படுகின்றது.
உயிரிழந்தவர்களின் சடலங்களை மூதூர் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஸான் நேற்றிரவு பார்வையிட்டு பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.