
பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரை பகுதியில் பெண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெண்ணின் சடலம் நேற்று (04) பிற்பகல் கரையொதுங்கியுள்ளது.
தும்பளை கிழக்கை சேர்ந்த 36 வயதுடைய இளம் குடும்பப் பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.
கடற்கரையில் சடலம் காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.