பாழடைந்த காணியிலிருந்து மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்- மூவர் கைது!

கல்கிஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலுதாகொட வீதியில் உள்ள பாழடைந்த காணியிலிருந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கொட்டாவ பொலிஸ் பிரிவின் மாக்கும்புர பல் ​போக்குவரத்து நிலையத்திற்கு அருகில் வைத்து நேற்று (04) கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கல்கிஸை பிரதேசத்தைச் சேர்ந்த 31, 32 மற்றும் 34 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 வாள்கள், கையடக்க தொலைபேசி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேல்மாகாண தெற்கு குற்றவியல் பிரிவு முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply