
அம்பாறை, பதியதலாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது கடமைக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பிபில பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (06) அதிகாலை 05.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த அதிகாரி அடுத்த ஆண்டு ஓய்வு பெற திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தவறான முடிவெடுத்துள்ளார்.
உயிரிழந்த நபரின் மனைவி, கடந்த ஆண்டு புற்றுநோயால் இறந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பதியத்தலாவை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.