
நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி,
மு.ப. 09.30 – மு.ப. 10.00 நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 – மு.ப. 11.00 – வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 – மு.ப. 11.30 நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 – பி.ப. 5.00 சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் தீர்மானம்
பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) இடம்பெறும்.
இந்த நிலையில் ஹேஷா விதானகே, ரோஹண பண்டார, சமிந்த விஜேசிறி மற்றும் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்த 6 தனிநபர் பிரேரணைகள் நாளை விவாதத்திற்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.