இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் விபத்து- 5 பேர் உயிரிழப்பு!

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று, இன்று (09) காலை மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது ஹெலிகொப்டரில் 2 விமானிகள் உட்பட 12 பேர் இருந்த நிலையில் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply