
கத்தோலிக்க திருச்சபையின் 267ஆவது புதிய பாப்பரசராக ஐக்கிய அமெரிக்காவை சேர்ந்த கர்தினால் ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
பாப்பரசர் கர்தினால் ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட்’க்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ X தளத்தில் வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார்.
குறித்த வாழ்த்து செய்தியில்,
“உங்கள் பங்கு பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளதுடன், அதன் ஊடாக உலக மக்களை வழிநடத்த உங்களுக்கு வலிமை கிடைக்க பிரார்த்திக்கின்றேன். உங்கள் தலைமை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கட்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.