பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட யாழ். சிறை கைதிகள்!

புனித வெசாக் தினத்தை முன்னிட்டு இன்றையதினம் 388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பீ திசாநாயக்க தெரிவித்திருந்த நிலையில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 20 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

அபராதம் செலுத்தாததால் சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகள், சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனையில் பாதி அல்லது அதற்கு மேற்பட்ட காலத்தை அனுபவித்த 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகள் வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுகின்றனர்.

அதன்படி யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைத்திருந்த 20 கைதிகளை யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் டி.ஐ.ஜெயவர்த்தன உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகள் கைலாகு கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply