
கொட்டாவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக 19 வயது இளம் பெண் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தை பகுதியில் வசிக்கின்ற 19 வயதுடைய புடம்மினி துரஞ்சா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் முற்றிலுமாக எரிந்துவிட்டதாகவும், வீட்டின் சொத்து மற்றும் கூரைக்கு சேதம் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் தாயாரும் இரண்டு சகோதரர்களும் வெசாக் கொண்டாட்டத்தை பார்வையிட சென்றிருந்த வேளையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கோட்டை ஸ்ரீ ஜெயவர்தனபுர தீயணைப்புத் துறையின் அதிகாரிகளும், அப்பகுதி மக்களும் வந்து தீயை அணைக்க நடவடிக்கை எடுத்த போதும், இளம் பெண்ணை காப்பாற்ற முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான கரணம் தொடர்பில் தகவல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுகேகொடை குற்றப்பிரிவு அதிகாரிகள் முன்னேஉடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.