
இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலையை எடுத்துக்காட்டும் விதமாக யாழ்ப்பாணம் நல்லூர் தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் இன்று ஊர்திப்பவனியொன்று ஆரம்பமாகியது.
இந்த ஊர்திப்பவனி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் தற்போது தமிழர் பகுதி எங்கும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலையை எடுத்துக்காட்டும் விதமாக இந்த ஊர்திப்பவனி ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.