பாரிய இடிபாட்டிற்குள் சிக்கிய பாடசாலை மாணவர்கள் – கனடாவில் பரபரப்பு!

கனடாவில் சுற்றுலாத் தலம் ஒன்றில் உள்ள நடைபாதை இடிந்து விழுந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வின்னிபெக் மாகாணத்தில் உள்ள செயிண்ட் போனிபேஸ் என்ற பகுதியில் அமைந்துள்ள ஜிப்ரால்டர் கோட்டைப் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கனடாவின் வின்னிபெக் மாகாணத்தில் உள்ள செயிண்ட் போனிபேஸ் என்ற பகுதியில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் கல்விகற்கும் மாணவர்கள் ஜிப்ரால்டர் கோட்டைப் பகுதிக்கு சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

5 மீற்றர் வரை உயரம் கொண்ட குறித்த நடைபாதையில் பாடசாலை மாணவர்கள் சென்று கொண்டிருந்தபோதே நடைபாதை இடிந்து வீழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

நடைபாதை இடிபாட்டிற்குள் 17 மணவர்கள், ஆசிரியர் உட்பட 18 பேர்  சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்களை மீட்புக்குழுவினர் துரிதமாக செயற்பட்டு மீட்டுள்ளனர்.

அதனையடுத்து நோயாளர் காவு வண்டி உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply