இந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்தின் நேரடி சாட்சியம்!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர் ஒருவர், தான் கண்ட  காட்சிகளை விவரித்துள்ளார்.

குறித்த விபத்தில் உயிர் தப்பிய அனுபவ் தாஸ் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விபத்து தொடர்பில் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை நிகழ்ந்த ரயில் விபத்துக்களிலேயே இது மிகப்பெரிய விபத்து என தான் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

கைகால் இல்லாத உடல்கள், ரயில் தண்டவாளத்தில் இரத்த வெள்ளம் எனவும் அந்த விபத்தை தன்னால் ஒருபோதும் மறக்க இயலாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

அந்த விபத்தில் 200 முதல் 250 பேர் வரை உயிரிழந்திருந்ததை தானே கண்டாதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொல்கொத்தாவிலிருந்து சென்னை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஷாலிமார் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிஷாவின் Balasore என்னும் இடத்தில் தடம் புரண்டு, நிறுத்திவைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் ஒன்றின் மீது மோதியுள்ளது.

தடம்புரண்ட பெட்டிகள் சில, பெங்களுரு – ஹவ்ரா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியுள்ளன.

வேகமாக வந்த ரயில்கள் மோதிக்கொண்டதில், பெட்டிகள் தூக்கி வீசப்பட்டதில், குறைந்தது 233 பேருக்கு மேல் பலியாகியுள்ளதாகவும், 900 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும், த்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply