இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு ஏற்பட்ட நிலைமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஏற்படாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுதியளிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
இக்கட்டான நேரத்தில் முன் வந்து சவாலை ஏற்றுக்கொண்டவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே என்றும், அனைவரும் சுதந்திரமாக வாழக்கூடிய நாட்டை உருவாக்கியவர் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த சவாலை ஏற்றுக் கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்ததாகவும் ஆனால், அதற்கான தைரியம் அவருக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியாகிய நாங்கள் எமது உதவிகளை வழங்குவோம்.
கோட்டாபய ராஜபக்சவுக்கு நடந்ததை ரணில் விக்ரமசிங்கவுக்கு நடக்க அனுமதிக்க மாட்டோம்.
இது அரசியல் பிரச்சினை அல்ல. இது மக்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்சினை.
தேர்தல் நேரத்தில் அரசியல் செய்யலாம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.