ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு எதிராகவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாகவும் நிமல் லன்சாவால் உருவாக்கப்பட்டு வரும் கூட்டணிக்கு அக்கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதியைத் தனியாக நேரில் சந்தித்து இந்த எதிர்ப்பை அவர் வெளியிட்டுள்ளார் என தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் ரணிலை ஜனாதிபதியாக்கியது மொட்டுக் கட்சி எனவும் அந்தக் கட்சியை அழிக்கும் வேலையைச் செய்ய வேண்டாம் எனவும் ரணிலிடம் பஸில் காட்டமாகக் கூறியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.