காங்கேசன்துறைக்கும், நாகபட்டினத்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று (12) இடம்பெறாது என கப்பல் நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறைக்கும், நாகபட்டினத்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று (12) ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சிறிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக கப்பல் சேவையானது இன்று இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.