![](https://onlinekathir.com/wp-content/uploads/2025/02/MediaFile-796x445.jpeg)
அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் அச்சக திணைக்கள ஊழியருக்கும், அதன் பாதுகாப்பு அதிகாரிக்கும் இடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது.
ஊழியர்கள் சிற்றுண்டிச்சாலையில் உணவு உண்பதற்கு மறுத்ததால், வெளியில் இருந்து உணவு வாங்குவதற்காக வளாகத்தை விட்டு வெளியேற பாதுகாப்பு அதிகாரி அனுமதி மறுத்துள்ளார்.
இதனால் அச்சக திணைக்கள ஊழியருக்கும், அதன் பாதுகாப்பு அதிகாரிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது பாதுகாப்பு உத்தியோகத்தர் கூர்மையான ஆயுதத்தால் ஊழியரைத் தாக்க முயன்றுள்ளார்.
பின்னர் இச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரி பொரெல்ல பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.