![](https://onlinekathir.com/wp-content/uploads/2025/02/06-2-1-796x445.jpg)
நெல்லை கொள்வனவு செய்யும் பொருட்டு அரசாங்கத்திற்குச் சொந்தமான அனைத்து களஞ்சியசாலைகளையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
சில விவசாயிகள் தங்கள் அறுவடை மாதிரிகளை ஏற்கனவே நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளில் சோதனைக்காக சமர்ப்பித்துள்ள போதும், விவசாயிகள் இன்னும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நெல்லை வழங்கவில்லை என்றும் நெல் சந்தைப்படுத்தல் சபை தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்தார்.
மேலும் விவசாயிகள் தமது அறுவடையில் குறைந்தபட்சம் ஒரு பகுதி நெல்லையாவது, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்க வேண்டும் என்று அநுராதபுரம் விவசாயிகள் ஒன்றிய அமைப்பின் தலைவர் புஞ்சிரல ரத்நாயக்க இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.