பணி நீக்கம் செய்யப்படும் புகையிரத திணைக்கள ஊழியர்!

கண்டி புகையிரத நிலைய சமிக்ஞை அறையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரை பணி நீக்கம் செய்ய புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு அனுமதியின்றி சமிக்ஞை அறையை காண்பித்ததாக குறித்த ஊழியர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அதன்படி வெளிநபர்களை அனுமதியின்றி புகையிரத நிலைய சமிக்ஞை அறையினுள் நுழைய அனுமதித்தமை தொடர்பாக, புகையிரத பாதுகாப்பு பிரிவு விசாரணை நடத்தியதை தொடர்ந்தே குறித்த ஊழியரை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply