
இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (16) மட்டக்களப்பில் நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் முடிவின்படி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசு கட்சி தெரிவித்துள்ளது.