
கடந்த வருடம் ஐந்தாம் மாதம் 30 ஆம் திகதி களனிவெளி பெருந்தோட்ட யாக்கத்திற்கு உட்பட்ட பீட்ரூ தோட்ட தொழிற்சாலையில் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு எதிராக பெருந்தோட்ட நிறுவனத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று(03) நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கில் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களின் பெயர்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.
இவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜரான போது வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் ஒன்பதாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அத்துடன் வழக்கில் ஆஜரான அனைவரும் ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.