
புதிய கல்வி சீர்திருத்தத்தில், தரம் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் மட்டுமே முழுமையாக மாற்றப்படும் என்றும், 10ஆம் தரப் பாடத்திட்டம் ஓரளவு மாற்றப்படும் என்றும் தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுள விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று தரங்களுக்கான புதிய கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்முறை 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து வகுப்பறைகளில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிய கல்வி சீர்திருத்தத்தில் மற்ற தரங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இருக்காது என்றும் தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுள விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
ஆவணங்களுக்குத் தேவையான தகவல்களை வழங்குதல், ஆசிரியர் பயிற்சித் திட்டங்களை ஒழுங்கமைத்தல், தொகுதிகளைத் தயாரித்தல் மற்றும் புத்தகங்களைத் தயாரித்தல் உள்ளிட்ட சீர்திருத்த செயல்முறை வேகமாக முன்னேறி வருவதாக சுட்டிக்காட்டிய அவர், இந்த திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கு தேசிய கல்வி நிறுவனத்தின் அதிகாரிகள் தங்கள் மிகுந்த அர்ப்பணிப்பை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.