
குருவிட்ட பொலிஸ் பிரிவின் அடவிகந்த பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று (03) காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வேன் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகிலுள்ள மரத்தில் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது, வேனில் இருந்த 14 மாணவர்களும், சாரதியும் காயமடைந்ததில் சிகிச்சைகளுக்காக எரத்த கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 10 மாணவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும், இரண்டு மாணவர்களும், இரண்டு மாணவிகளும் வேனின் சாரதியும் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குருவிட்ட பொலிஸார் மேற்கொன்டு வருகின்றனர்.