எரிபொருள் விநியோகம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு முறைப்பாடு!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தின் போது வழங்கும் தள்ளுபடி தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளதால், எரிபொருள் விநியோக செயல்முறையை சீர்குலைத்து, அரசாங்கத்திற்கு சிரமத்தை ஏற்படுத்த எரிபொருள் விநியோக முகவர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு குழு முயற்சிப்பதாகவும், பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த முறைப்பாடு தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

மேலும், சாதாரண பொது மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்து, நிலையற்ற தன்மையை உருவாக்கி பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply