
பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக வர்த்தக அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
இன்றிலிருந்து அமுலாகும் விதத்தில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் குறைக்க பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நேற்று (17) தீர்மானித்திருந்தது.
அதன்படி, கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு மேற்கொண்ட தீர்மானத்திற்கமைய, பாணின் விலையை குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பேக்கரியில் தயாரிக்கப்படும் ஏனைய உற்பத்திகளின் விலையையும் குறைப்பதற்கும் பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் இணங்கி உள்ளதாக அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.