
எதிர்காலத்தில் எரிபொருளுக்கான வரி குறைக்கப்படும் எனவும், வரிக்குறைப்பை மேற்கொள்வதற்கு உரிய முறையில் நடவடிக்கை எடுத்து வருகின்றோம் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று (18) நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.
இதில் வாய்மொழி மூல கேள்வி பதிலுக்கான நேரத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், தற்போது வழங்கப்படக்கூடிய அனைத்து சலுகைகளையும் வழங்கியுள்ளோம். அதோடு புதிதாக எந்தவொரு வரியும் விதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.