
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிதாரி மற்றும் அவர் தப்பி செல்ல உதவிய சாரதி ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று இந்த உத்தரவை வழங்கினார்.
அத்துடன், புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு சட்டத்தரணியாக வந்த பெண் சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு குற்றவியல் பிரிவில் பொறுப்பிலிருந்த சந்தேகநபர்கள் இன்று (24) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலியால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.