
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூட்டங்களில் பொது வெளியில் கலந்துகொள்வது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதுடன், இது குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது பாதாள உலக குழுக்களுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதால், அந்த பாதாள உலக நடவடிக்கைகளுக்குப் பின்னால் வேறு ஏதேனும் செல்வாக்கு உள்ளதா என்ற சந்தேகம் பாதுகாப்புப் படையினருக்கு எழுந்துள்ளது.
இந்தநிலையில் பாதாள உலக நடவடிக்கைகளுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றன.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சமீப நாட்களாக கூடங்களில் கலந்து கொள்வதுடன் மக்களுடனும் சுமுகமாக பழகி வருவதையும் அவதானிக்க முடிகின்றது. இந்த நடைமுறை ஜனாதிபதியின் பாதுகாப்பிற்குப் பொருத்தமானதல்ல என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதியும் அரசாங்கமும் கூறினாலும், நாட்டின் தற்போதைய சூழலில் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிக்க, அவரது பாதுகாப்பு கண்டிப்பாக உறுதி செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
எனவே பொதுமக்களுக்கு அருகாமையில் இருப்பதைக் குறைக்குமாறு பாதுகாப்புப் படையினர் ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.