
மகா சிவராத்திரியை முன்னிட்டு எதிர்வரும் 27 ஆம் திகதி (வியாழக்கிழமை) சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக குறித்த மாகாணங்களின் கல்விச் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் மேற்படி மாகாணங்களிலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் 27 ஆம் திகதி வழமை போன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.