
அரசாங்க வைத்திய அதிகாரிகளின் மேலதிக பணிக்கொடுப்பனவு மற்றும் விடுமுறை கொடுப்பனவு குறைப்பு தொடர்பில் எதிர்ப்பு வெளியிட்டு மார்ச் 5 ஆம் திகதி முதல் நாடளாவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்திருந்தது.
எனினும் குறித்த போராட்டத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.