ட்ரம்பின் வரி கொள்கை- அநுர அரசு வெளியிட்ட தகவல்!

அமெரிக்காவின் பரிந்துரைக்கு அமைவாக, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைப்பதற்கான முன்மொழிவு குறித்து தொழில் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறும் விசேட கலந்துரையாடலின் போது அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைப்பதற்கான முன்மொழிவு அந்நாட்டு அதிகாரிகளிடம் முன்வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிக் கொள்கை இலங்கையை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் ​போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“44% வரி விதிக்கப்பட்ட பிறகு, அது 80-86 வீதமான முக்கிய வகை ஏற்றுமதி பொருட்களுக்குப் பொருந்தும்.

ஆடைத் துறை, பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் பொருட்கள், உணவு பதப்படுத்தும் பொருட்கள், நகைகள் மற்றும் பலவற்றிற்குப் பொருந்தும். மொத்தமாக 86% ஆகிறது.

வரிகள் விதிக்கப்படுவதால், நமது பொருட்கள் போட்டியற்றதாகிவிடும். நாம் என்ன செய்ய முடியும்? அமெரிக்கா வர்த்தக இடைவெளியைக் குறைக்க முன்மொழிந்தது.

நாங்கள் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினோம். வர்த்தக இடைவெளியைக் குறைப்பதற்கான எங்கள் திட்டங்களை முன்வைக்குமாறு எங்களிடம் கேட்கப்பட்டது.

அதன்படி, அடுத்த செவ்வாய்க்கிழமை (08) இறுதி முன்மொழிவுகளை நாங்கள் முன்வைப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply