தேசபந்து தென்னக்கோன் விவகாரம்- ஆராய விசேட குழு!

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அதனை அறிக்கையிடுவதற்கான விசாரணைக் குழு சபாநாயகரால் நியமிக்கப்பட்டது.

2002ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 05ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 3 (ஈ) மற்றும் 3(உ) பிரிவுகளிற்கு அமைய துர்நடத்தை மற்றும் பதவியின் தத்துவங்களைப் பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு குறித்த சட்டத்தின் 5வது பிரிவுக்கு அமைய விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் கடந்த 08ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதற்காக உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேன தலைமையில் மூவரடங்கிய சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்புக்குழுவின் இணை உறுப்பினர்களாக நீதியரசர் (ஒய்வுநிலை) எம்.என்.பி.இத்தவெல மற்றும் தேசிய பொலிஸ் சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் எம்.லலித் ஏக்கநாயக்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

குறித்த விசாரணைக் குழு நேற்றைய தினம் (23) நாடாளுமன்றத்தில் முதல் தடவையாகக் கூடிக் கலந்துரையாடியது. இக்குழு மீண்டும் நாளை 25ஆம் திகதி கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply